தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தவறுகளைத் திருத்திக்கொள்!

தவறுகளைத் திருத்திக்கொள்!

தவறுகளைத் திருத்திக்கொள்!


ADDED : பிப் 03, 2013 12:02 PM

Google News

ADDED : பிப் 03, 2013 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.

* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும்.

* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.

* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.

* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.

* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.

* 'நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us